அதிகாரம் / Chapter 64
திருக்குறள் 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை- குதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல்.
பரிமேலழகர்
கருவியும்-வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும்-அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும்-அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு- வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான். விளக்கம் (கருவிகள்-தானையும் பொருளும். காலம்-அது தொடங்கும் காலம். 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தனையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.)
English explanation
A minister is he who grasps, with wisdom large,Means, time, work's mode, and functions rare he must discharge
The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).