அதிகாரம் / Chapter 64

திருக்குறள் 632

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அஞ்சாமையும், குடிகாத்தலும், இந்திரியங்களைக் காத்தலும், நூல்முகத்தானறிதலும், முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். இவை அமைச்சனாவதன் முன்னே வேண்டுமாதலின், இது முற்கூறப்பட்டது.

பரிமேலழகர்

வண்கண்-வினை செய்தற்கண் அசைவின்மையும்; குடி காத்தல்-குடிகளைக் காத்தலும்; கற்று அறிதல்-நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; ஆள்வினையொடு-முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு-மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான். விளக்கம் (எண்ணோடு நீண்டது. 'அவ்வைந்து' எனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது, அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்து என்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டு எண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும், அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும், 'கற்று அறிதல்' என்பதனைக் கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும், 'குடி' என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப..)

English explanation

A minister must greatness own of guardian power, determined mind,Learn'd wisdom, manly effort with the former five combined

The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.