அதிகாரம் / Chapter 124
திருக்குறள் 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள். இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. பசந்து பணி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நம்மால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவது போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும். விளக்கம் (சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
English explanation
The eye, with sorrow wan, all wet with dew of tears,As witness of the lover's lack of love appears
The discoloured eyes that shed tears p rofusely seem to betray the unkindness of our beloved.