அதிகாரம் / Chapter 124
திருக்குறள் 1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள். அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகாநின்றன. கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது.
பரிமேலழகர்
இதுவும் அது. மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று; இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்தவதுபோல மெலியா நின்றன; இது தகாது. விளக்கம் ('அன்றும் அவ்வாறு பூரித்து, இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.) _
English explanation
These withered arms, desertion's pangs abundantly display,That swelled with joy on that glad nuptial day
The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).