அதிகாரம் / Chapter 124

திருக்குறள் 1234

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது. பசுத்த வளை- மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

பரிமேலழகர்

இதுவும் அது. துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றி, பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும். இன்று அதற்குமேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன; இவை இங்ஙனம் செயற்பாலவல்ல. விளக்கம் (பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால் செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனி அவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ?' என்பதாம்.)

English explanation

When lover went, then faded all their wonted charms,And armlets' golden round slips off from these poor wasted arms

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.