அதிகாரம் / Chapter 124

திருக்குறள் 1235

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுதொல்கவின் வாடிய தோள்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும். இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியொடு தொல் கவின் வாடிய தோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை? விளக்கம் ('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ?' என்பதாம்.)

English explanation

These wasted arms, the bracelet with their wonted beauty gone,The cruelty declare of that most cruel one

The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.