அதிகாரம் / Chapter 22

திருக்குறள் 216

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின். இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.

பரிமேலழகர்

செல்வம் நயன் உடையான்கண் படின்-செல்வம் ஒப்புரவு செய்வான்கண்ணே படுமாயின்; பயன் மரம் உள்ளூர் பழுத்தற்று-அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். விளக்கம் (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார். எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)

English explanation

A tree that fruits in th' hamlet's central mart,Is wealth that falls to men of liberal heart

The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.