அதிகாரம் / Chapter 22
திருக்குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம். இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.
பரிமேலழகர்
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு-உலகநடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினை யுடையவனது செல்வம்; ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற்போலும். விளக்கம் (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.)
English explanation
The wealth of men who love the 'fitting way,' the truly wise,Is as when water fills the lake that village needs supplies
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.