அதிகாரம் / Chapter 93

திருக்குறள் 929

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தௌ¤வித்தல், நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும். இது பிறர்சொல்லவும் கேளாரென்றது.

பரிமேலழகர்

களித்தானைக் காரணம் காட்டுதல்-கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குறித்தானைத் தீத்துரீஇ அற்று . நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினல் நாடுதலை யொக்கும். விளக்கம் ('களித்தானை' என்னும் இரண்டாவது, "அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ" (கலித். மருதம். 7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற் போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.)

English explanation

Like him who, lamp in hand, would seek one sunk beneath the waveIs he who strives to sober drunken man with reasonings grave

Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.