அதிகாரம் / Chapter 93
திருக்குறள் 930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்துத் தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்; நினைப்பானாயின் தவிரும்.
பரிமேலழகர்
கண் உண்ணாப் போழ்தில் களித்தானை-கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்தபொழுதின் கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல்-காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும்! விளக்கம் (சோர்வு-மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.)
English explanation
When one, in sober interval, a drunken man espies,Does he not think, 'Such is my folly in my revelries'
When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.