அதிகாரம் / Chapter 27
திருக்குறள் 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.
பரிமேலழகர்
இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின்; நோற்பார் சிலர் நோலாதவர் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். விளக்கம் (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன; என்னை? "நுண்ணுணர்வு இன்மை வறுமை; அஃதுடைமை, பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்" (நாலடி. 251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப் பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.)
English explanation
The many all things lack! The cause is plain,The 'penitents' are few The many shun such pain
Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.