அதிகாரம் / Chapter 73

திருக்குறள் 730

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார். இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின.

பரிமேலழகர்

களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக் களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர். விளக்கம் ('ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவை அஞ்சு வாரது இழிவு கூறப்பட்டது.)

English explanation

Who what they've learned, in penetrating words know not to say,The council fearing, though they live, as dead are they

Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.