அதிகாரம் / Chapter 67

திருக்குறள் 670

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர்

வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை 'இது நமக்குச் சிறந்தது' என்று கொள்ளாத அமைச்சரை; எனைத் திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர். விளக்கம் [மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம்; ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பதுபற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.]

English explanation

The world desires not men of every power possessed,Who power in act desire not,- crown of all the rest

The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.