அதிகாரம் / Chapter 68
திருக்குறள் 671
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடைக்குமாயின் அது தீதாம். இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது.
பரிமேலழகர்
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை, பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின், அது குற்றமுடைத்து. விளக்கம் ['சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் எனவே, துணிவு எய்தும் அளவும் சூழ வேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு; செய்யுங்காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழி வாகலானும், பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் 'தீது' என்றார்.]
English explanation
The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous fault
Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil,”