அதிகாரம் / Chapter 67
திருக்குறள் 669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.
பரிமேலழகர்
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின் கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க. விளக்கம் [துணிவு-கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாம இன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச் செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினை செய்யுமாறு கூறப்பட்டது.]
English explanation
Though toil and trouble face thee, firm resolve hold fast,And do the deeds that pleasure yield at last
Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).