அதிகாரம் / Chapter 67
திருக்குறள் 668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.
பரிமேலழகர்
கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித் தலை யொழிந்து செய்க. விளக்கம் [கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை திட்பம் உடைமை].
English explanation
What clearly eye discerns as right, with steadfast will,And mind unslumbering, that should man fulfil
An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.