அதிகாரம் / Chapter 118

திருக்குறள் 1171

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாம்காட்ட யாம்கண் டது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.

பரிமேலழகர்

'நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன; நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலானன்றோ; கண தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? விளக்கம் ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது?' என்பதாம்.)

English explanation

They showed me him, and then my endless painI saw: why then should weeping eyes complain

As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).