அதிகாரம் / Chapter 72

திருக்குறள் 719

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்குசலச் சொல்லு வார்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக: நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார்.

பரிமேலழகர்

நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக. விளக்கம் (சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகா என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.)

English explanation

In councils of the good, who speak good things with penetrating power,In councils of the mean, let them say nought, e'en in oblivious hour

Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low