அதிகாரம் / Chapter 88

திருக்குறள் 876

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தௌ¤யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தௌ¤வதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக. இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.

பரிமேலழகர்

தேறினும் தேறாவிடினும் - பகைவனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்; அழிவின்கண் தேறான் பகான் விடல் - தனக்குப் புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. விளக்கம் ('முன் தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது, உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி. 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது)

English explanation

Whether you trust or not, in time of sore distress,Questions of diff'rence or agreement cease to press

Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).