அதிகாரம் / Chapter 10

திருக்குறள் 93

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

பரிமேலழகர்

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி-கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின் நண்ணிய வழி, மனத்துடன் இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். விளக்கம் ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல் நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.

English explanation

With brightly beaming smile, and kindly light of loving eye,And heart sincere, to utter pleasant words is charity

Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.