அதிகாரம் / Chapter 10
திருக்குறள் 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின்.
பரிமேலழகர்
அகன் அமர்ந்து ஈதலின் நன்று-நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்-கண்டபொழுதே முகம் இனியனாய் அதனோடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். விளக்கம் (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின், அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.
English explanation
A pleasant word with beaming smile's preferred,Even to gifts with liberal heart conferred
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.