அதிகாரம் / Chapter 10

திருக்குறள் 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?.

பரிமேலழகர்

இன்சொல்-இன்சொல்லாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். விளக்கம் ('ஆல்' அசைநிலை. அன்போடு கலத்தல்-அன்புடைமை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின், 'செம்பொருள்' எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)

English explanation

Pleasant words are words with all pervading love that burn;Words from his guileless mouth who can the very truth discern

Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.