அதிகாரம் / Chapter 10

திருக்குறள் 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.

பரிமேலழகர்

யார்மட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு-எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும்-துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். விளக்கம் (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' எனப்பட்டுது. 'யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பே ஆம். ஆகவே, அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.)

English explanation

The men of pleasant speech that gladness breathe around,Through indigence shall never sorrow's prey be found

Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.