அதிகாரம் / Chapter 114
திருக்குறள் 1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடல்ஒல்லா பேதைக்கென் கண்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன். இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.
பரிமேலழகர்
'மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது.) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலை பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன். விளக்கம் ('பேதை' என்றது பருவம் பற்றி அன்று; மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.)
English explanation
Of climbing 'horse of palm' in midnight hour, I think;My eyes know no repose for that same simple maid
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.