அதிகாரம் / Chapter 114
திருக்குறள் 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுமாலை உழக்கும் துயர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள். தொடலை யென்பதற்குச் சோர்ந்த வளை யெனினும் அமையும். குறுந்தொடி- பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று.
பரிமேலழகர்
விளக்கம் (காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அதுபற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள்தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்,' என்பது கருத்து.)
English explanation
The maid that slender armlets wears, like flowers entwined,Has brought me 'horse of palm,' and pangs of eventide
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.