அதிகாரம் / Chapter 114
திருக்குறள் 1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுநல்லாண்மை என்னும் புணை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்றது.
பரிமேலழகர்
நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின், அதனால் 'அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற் பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது. விளக்கம் (அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்,' என்பதாம்.)
English explanation
Love's rushing tide will sweep away the raftOf seemly manliness and shame combined
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.