அதிகாரம் / Chapter 114
திருக்குறள் 1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.
பரிமேலழகர்
'நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது. நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; விளக்கம் (காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். நாண்: இழிவாயின செய்தற் கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன; இன்று உள்ளது இதுவேயாகலின், கடிதின் முடியும்,' என்பதாம்.)
English explanation
I once retained reserve and seemly manliness;To-day I nought possess but lovers' 'horse of palm'
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.