அதிகாரம் / Chapter 56

திருக்குறள் 557

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு. இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.

பரிமேலழகர்

துளி இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும்; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு. விளக்கம் (சிறப்புப்பற்றி, 'துளி' என்பது மழைமேல் நின்றது: "உயிர்" என்பது குடிகள்மேல் நின்றது. மேல் "வான் நோக்கி வாழும்" என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)

English explanation

As lack of rain to thirsty lands beneath,Is lack of grace in kings to all that breathe

As is the world without rain, so live a people whose king is without kindness.