அதிகாரம் / Chapter 52
திருக்குறள் 516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்வினை அவன் செய்வானாக அமைக்க வேண்டும்.
பரிமேலழகர்
செய்வானை நாடி-முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி-பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து; காலத்தொடு எய்த உணர்ந்து செயல்-பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க. விளக்கம் [செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல் பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.]
English explanation
Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'Of hour befitting both assured, let every work proceed
Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.