அதிகாரம் / Chapter 52
திருக்குறள் 517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவனென்று ஆராய்ந்து பின்பு அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக. இது பெரும்பான்மையுஞ் சேனாதிபதியை நோக்கிக் கூறிற்று.
பரிமேலழகர்
இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ் வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து; அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக. [கருவி:துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.] விளக்கம் [கருவி:துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.]
English explanation
'This man, this work shall thus work out,' let thoughtful king command;Then leave the matter wholly in his servant's hand
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.