அதிகாரம் / Chapter 52

திருக்குறள் 518

வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக. இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது.

பரிமேலழகர்

வினைக்கு உரிமை நாடிய பின்றை-ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால்;அவனை அதற்கு உரியனாகச் செயல்-பின் அவனை அதற்குரியனாமாறு உயரச் செய்க. விளக்கம் [உயரச் செய்தலாவது: அதனைத் தானே செய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.]

English explanation

As each man's special aptitude is known,Bid each man make that special work his own

Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.