அதிகாரம் / Chapter 109
திருக்குறள் 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ? மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து. இக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமை யான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ; அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது. விளக்கம் (இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில் பற்றி வந்த ஐயநிலை உவமம்.)
English explanation
The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?Or fawn's shy glance? All three appear In form of maiden here
Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?