அதிகாரம் / Chapter 109
திருக்குறள் 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக்கு அமர்த்தன கண்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள். அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்ந்திருந்தன. விளக்கம் (அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.)
English explanation
In sweet simplicity, A woman's gracious form hath she;But yet those eyes, that drink my life, Are with the form at strife
These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.