அதிகாரம் / Chapter 57

திருக்குறள் 561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமை காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்.

பரிமேலழகர்

தக்காங்கு நாடி-ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாக நின்று ஆராய்ந்து தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து-பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான். விளக்கம் ['தக்காங்கு', 'ஒத்தாங்கு' என்பன ஒரு சொல். தகுதி என்பது நடுவுநிலைமையாதல் "தகுதி என ஒன்றும் நன்றே" (குறள். 111) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.] ---

English explanation

Who punishes, investigation made in due degree,So as to stay advance of crime, a king is he

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.