அதிகாரம் / Chapter 34

திருக்குறள் 333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நில்லாத வியல்பை யுடைத்துச் செல்வம்; அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க. நிலையாமை மூன்று வகைப்படும்: செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.

பரிமேலழகர்

அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடையப்துச் செல்வம்; அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப் பெற்ற பொழுதே செய்க. விளக்கம் ('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழ் உள்வழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், 'அது பெற்றால்' என்றும், அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட்பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின், அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.)

English explanation

Unenduring is all wealth; if you wealth enjoy,Enduring works in working wealth straightway employ

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.