அதிகாரம் / Chapter 124

திருக்குறள் 1238

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.

பரிமேலழகர்

வினைமுடித்து மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது. முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒரு ஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது; அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? விளக்கம் ('இனிக் கடிதிற் சொல்லவேண்டும்' என்பது கருத்து.)

English explanation

One day the fervent pressure of embracing arms I checked,Grew wan the forehead of the maid with golden armlet decked

When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.