அதிகாரம் / Chapter 48
திருக்குறள் 473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி அது முடிவதன்முன்னே கெட்டார் பலர். இது வலியறியாதார் கெடுவரென்றது.
பரிமேலழகர்
உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே: ஊக்கத்தின் ஊக்கி - மன எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி; இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர். விளக்கம் ['உடைய' என்பது அவாய் நின்றமையின், செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.]
English explanation
Ill-deeming of their proper powers, have many monarchs striven,And midmost of unequal conflict fallen asunder riven
There are many who, ignoran t of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.