அதிகாரம் / Chapter 48
திருக்குறள் 474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன். இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.
பரிமேலழகர்
ஆங்கு அமைந்து ஒழுகான் - அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது; அளவு அறியான் - தன் வலியளவு அறிவதும் செய்யாது; தன்னை வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன்; விரைந்து கெடும் - விரையக் கெடும் விளக்கம் [காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றே அயல் வேந்தரோடு செயற்பாலது; இவையன்றித் தான் மெலியனாய் வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்து கெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.]
English explanation
Who not agrees with those around, no moderation knows,In self-applause indulging, swift to ruin goes
He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.