அதிகாரம் / Chapter 122

திருக்குறள் 1217

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்என்எம்மைப் பீழிப் பது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?. இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர்

விழித்துழிக் காணாளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது. நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாது கொடியவர்; கனவினான் எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி? விளக்கம் (பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கி, 'கொடியார்' என்றும், கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர்; 'அது கண்டிலம்,' என்பதாம்.)

English explanation

The cruel one, in waking hour, who all ungracious seems,Why should he thus torment my soul in nightly dreams

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?