அதிகாரம் / Chapter 82
திருக்குறள் 814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் நெறிப்படாமல் நடந்து ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும் ஒருவன் தனியனாதல் நன்று. இது பகைவர் நட்புத் தீமைபயக்கு மென்றது.
பரிமேலழகர்
அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் - அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக் களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல் வாரது தமர்மையில்; தனிமை தலை - தனிமை சிறப்பு உடைத்து. விளக்கம் (கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்..)
English explanation
A steed untrained will leave you in the tug of war;Than friends like that to dwell alone is better far
Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.