அதிகாரம் / Chapter 126
திருக்குறள் 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோஎற்றென்னை உற்ற துயர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால் என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது. இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.
பரிமேலழகர்
இதுவும் அது. செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. 'செற்றவர்' என்றது ஈண்டும் அப்பொருட்டு 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது, இகழ்ச்சிக் குறிப்பு. 'இக் காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது,' என்பதாம்.)
English explanation
My grief how full of grace, I pray you see!It seeks to follow him that hateth me
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?