அதிகாரம் / Chapter 43
திருக்குறள் 429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை. இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது.
பரிமேலழகர்
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு; அதிர வருவது ஓர் நோய் இல்லை . அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை. விளக்கம் ('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம் இன்மை இதனான் கூறப்பட்டது.)
English explanation
The wise with watchful soul who coming ills foresee;From coming evil's dreaded shock are free
No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.