அதிகாரம் / Chapter 54

திருக்குறள் 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு. தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.

பரிமேலழகர்

சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு-மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி; இறந்த வெகுளியின் தீது-அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. விளக்கம் [மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்; இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று.]

English explanation

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soulBring self-forgetfulness than if transcendent wrath control

More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.