அதிகாரம் / Chapter 59
திருக்குறள் 587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான். இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.
பரிமேலழகர்
மறைந்தவை கேட்க வற்று ஆகி-ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று-கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான். விளக்கம் (மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து, அத் தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்க வேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும், கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின்,'ஐயப்பாடு இல்லதே' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.)
English explanation
A spy must search each hidden matter out,And full report must render, free from doubt
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.