அதிகாரம் / Chapter 59

திருக்குறள் 588

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.

பரிமேலழகர்

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஓரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியத்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க. விளக்கம் (ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.)

English explanation

Spying by spies, the things they tellTo test by other spies is well

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.