அதிகாரம் / Chapter 123

திருக்குறள் 1221

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

பரிமேலழகர்

பொழுதொடு புலந்து சொல்லியது. பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய். விளக்கம் (முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். 'வாழி' என்பது குறிப்புச் சொல். "வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை" (கலித். நெய்தல். 2 ) என்றார்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். 'வேலை' என்பதற்கு வேலாயிருந்தாய் 'என்பாரும்' உளர்.)

English explanation

Thou art not evening, but a spear that doth devourThe souls of brides; farewell, thou evening hour

Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.