அதிகாரம் / Chapter 123
திருக்குறள் 1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்வன்கண்ண தோநின் துணை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும். இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.
பரிமேலழகர்
தன்னுட்கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது. மருள் வாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை - நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம் கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணைபோல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக. விளக்கம் (மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை,' என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.)
English explanation
Thine eye is sad; Hail, doubtful hour of eventide!Of cruel eye, as is my spouse, is too thy bride
A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.