அதிகாரம் / Chapter 123

திருக்குறள் 1223

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்துன்பம் வளர வரும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.

பரிமேலழகர்

ஆற்றல்வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்துவந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்து பாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒருகாலைக்கு ஒரு கால் மிக வாரா நின்றது. விளக்கம் (குளிர்ச்சி தோன்ற மயங்கிவரு மாலை என்னுஞ் செம்பொருள் இக் குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை?' என்பது குறிப்பெச்சம்.)

English explanation

With buds of chilly dew wan evening's shade enclose;My anguish buds space and all my sorrow grows

The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.