அதிகாரம் / Chapter 101

திருக்குறள் 1008

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பிறரால் ஆசைப்படாதவனது செல்வம், ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து. இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின் அவரைக் கொல்லுமென்றது.

பரிமேலழகர்

நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும். விளக்கம் ('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அன்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.)

English explanation

When he whom no man loves exults in great prosperity,'Tis as when fruits in midmost of the town some poisonous tree

The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.