அதிகாரம் / Chapter 13

திருக்குறள் 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.

பரிமேலழகர்

அடக்கம் அமரருள் உய்க்கும்-ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும்-அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். விளக்கம் ('இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்'' (நான்மனிக். 7) என்றார்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.)

English explanation

Control of self does man conduct to bliss th' immortals share;Indulgence leads to deepest night, and leaves him there

Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).